advertisement

தூத்துக்குடி பத்திரகாளி அம்மன் திருக்கோயில் தசரா திருவிழா

அக். 19, 2026 6:28 முற்பகல் |

 

தூத்துக்குடி நந்தகோபாலபுரம் செல்வநாயகபுரம் பத்திரகாளி அம்மன் திருக்கோயில் தசரா திருவிழாவின் 7-ம் நாள் மண்டல பூஜை நடைபெற்றது.

இதையொட்டி நடைபெற்ற சிறப்புப் பூஜையில், பெரியசாமியின் மகன்களும், தர்மகர்த்தாக்களுமான என்.பி. ராஜா பெரியசாமி, மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் அசோக் வர்தனா ஆகியோருக்குப் பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்குத் திரண்டிருந்த பக்தர்களுக்குப் பொங்கல், புளியோதரை பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கவுன்சிலர் கனகராஜ், வட்ட செயலாளர்கள் ரவீந்திரன், முனியசாமி, ராஜாமணி, மாவட்ட பிரதிநிதி நாராயணன், முன்னாள் கவுன்சிலர்கள் மாரியப்பன்,  உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement