advertisement

தூத்துக்குடி வந்த சீன கப்பலுக்கு  வ.உ.சி. துறைமுகத்தில் வரவேற்பு!

அக். 19, 2026 4:51 முற்பகல் |


  

 தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் சுஷாந்தகுமார் புரோகித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சீனா, வியட்நாம் மற்றும் இந்தியாவை இணைக்கும் வகையில் ரீஜினல் கன்டெய்னர் லைன் நிறுவனம் மூலம் நேரடியாக சீனா, வியட்நாம் வழியாகத் தூத்துக்குடிக்குச் சரக்கு கப்பல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று முதல்முறையாக 'எம்.வி.நவ்தா. பூம்' என்ற சரக்கு பெட்டக கப்பல் தூத்துக்குடிக்கு வந்தது.

அந்தக் கப்பலை வ.உ.சி. துறைமுக அதிகாரிகள், சரக்கு பெட்டக முனைய அதிகாரிகள் வரவேற்றனர். 147.82 மீட்டர் நீளமும், 23.38 மீட்டர் அகலமும் கொண்ட இந்தக் கப்பல், 1,100 சரக்கு பெட்டகங்களைக் கையாளும் திறன் கொண்டது.

இந்தக் கப்பல் சீனாவின் கின்ஷோ துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு, வியட்நாம் ஹைப்ோங் துறைமுகம் வழியாகத் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வந்தடைந்தது. பின்னர் காட்டுப்பள்ளித்துறைமுகம், வியட்நாமின் சூலாய் துறைமுகத்தைச் சென்றடைகிறது. அங்கிருந்து கின்ஷோவுக்குத் திரும்புகிறது.

சீனாவின் கின்ஷோவில் இருந்து தூத்துக்குடியை வந்தடைய 13 நாட்களும், வியட்நாமின் ஹைபோங்கில் இருந்து தூத்துக்குடியை வந்தடைய 12 நாட்களும் ஆகிறது. இந்தக் கப்பல் தற்போது வாரத்துக்கு இருமுறை மட்டுமே இயக்கப்படுகிறது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் தேவையைப் பொறுத்து சேவையின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement