advertisement

கட்சியா இல்லை நார்கோஸ் கூடாரமா? தவெக குறித்து உதயநிதி கேள்வி

அக். 19, 2026 6:51 முற்பகல் |


எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

வரலாற்றில் இல்லாத அளவுக்கு 135 கிலோ மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக நாகை த.வெ.க நிர்வாகி பூபாலன் கைதான நிலையில், அது தொடர்பாக செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார் த.வெ.க-வின் நாகை நகரச் செயலாளர் பால்ராஜ்.பூபாலன் த.வெ.க-வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கட்சிப்பொறுப்பில் உள்ள இன்னொரு நிர்வாகி, போதைப்பொருள் கடத்திய நபருக்கு வக்காலத்து வாங்குவதும் - பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதும் ஏன்?

கட்சியா இல்லை #நார்கோஸ் கூடாரமா என்று கேட்கும் அளவுக்கு த.வெ.க போதைப்பொருள் நெட் வொர்க்-ன் அட்டூழியம் அதிகமாகிக்கொண்டே போகிறது.ரீல் எடுப்பதிலேயே காலத்தை கழிக்காமல் கொஞ்சம் ரியலிடிக்-க்கு வந்து போதைப்பொருள் நடமாட்டத்தையும் - அதைக் கடத்தும் த.வெ.க.வினரையும் முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும் என அதில் பதிவிட்டுள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement