advertisement

சமூக ஆர்வலர் பூபாலனுக்கு சமூக நல்லிணக்க மாமணி விருது .

அக். 19, 2026 5:02 முற்பகல் |

சமூக ஆர்வலர் எஸ்.பூபாலனுக்கு சமூக நல்லிணக்க மாமணி விருது . பேராசிரியர் கலைமாமணி கு.ஞானசம்பந்தன் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையும் , மதுரை நகைச்சுவை மன்றமும் இணைந்து நடத்திய விழாவில் பேராசிரியர் கலைமாமணி கு. ஞானசம்பந்தன்  பரமக்குடி சமூக ஆர்வலர் எஸ்.பூபாலனுக்கு சமூக நல்லிணக்க மாமணி விருது வழங்கி சிறப்பித்தார்.  விழாவிற்கு , மருத்துவமனை நிர்வாக அதிகாரி பாண்டியராஜன், கல்வியாளர் பால கார்த்திகேயன் ஆகியோர்  முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.

சமூக நல்லிணக்க மாமணி விருது பெற்ற எஸ்.பூபாலனை கல்வி துறையினர்கள், ஆசிரிய பெருமக்கள், சமூக - நகைச்சுவை மன்ற ஆர்வலர்கள், அன்பர்கள் , குடும்பத்தினர்கள், உறவினர்கள், நகரின் முக்கிய பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினரும் நேரிலும், அலைபேசி வாயிலாகவும் வாழ்த்தி பாராட்டிய வண்ணமாய் உள்ளனர். 

மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement