advertisement

35-வது முறை குருதிக்கொடை வழங்கிய நிழல் அறக்கட்டளை தலைவர்

அக். 19, 2026 10:25 முற்பகல் |

 

கன்னியாகுமரி மாவட்டம் பெரிய விளையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிழல் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் கில்பட் தாஸ், தனது 35வது பிறந்த நாளை முன்னிட்டு 35-வது முறையாக குருதிக்கொடை வழங்கி மனிதநேயச் செயலுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளார்.

பிறந்த நாளை வெறும் கொண்டாட்டமாக மட்டுமே கருதாமல், பிறரது உயிரைக் காக்க உதவும் வகையில் குருதிக்கொடை வழங்கிய அவரது செயல் சமூக அக்கறையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
தொடர்ந்து 35 முறை குருதிக்கொடை வழங்கியுள்ள டாக்டர் A. கில்பட் தாஸின் சேவை மனப்பான்மைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும் பிறந்த நாள் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
குருதிக்கொடை செய்வோம்! உயிர்களைக் காப்போம்! என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவரது பிறந்த நாள் குருதிக்கொடை நிகழ்வு அமைந்துள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement