advertisement

ஆடி அமாவாசை- ராமேஸ்வரம் கடற்கரையில் தர்பணம்

ஜூலை 24, 2025 9:50 முற்பகல் |

ஆடி அமாவாசையையொட்டி ராமேஸ்வரம், சேது கரை, மாரியூர் கடற்கரைகளில் பல ஆயிரக்கணக்கானவர்கள் தர்பணம் செய்தார்கள்.

நம் முன்னோர்களின் ஆசி பெறுவதற்காக ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்று அவர்களை நினைத்து கடற்கரையில் தர்ப்பணம் செய்து வருவதும்,கடற்கரைக்கு செல்ல இயலாதவர்கள் பசு மாட்டிற்கு அகத்தி கீரையும், வாழைப்பழம் வழங்குவது சம்பிராயமாக நடைபெற்று வருகிறது.ஒவ்வொரு ஆண்டும், ஆடி அமாவாசை , தை அமாவாசை , புரட்டாசி மகளாய அமாவாசை மூன்றும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சந்ததியர்களின் குடும்பத்தினர்களுக்கு சிறந்தது.

இந்நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், சேது கரை (திருப்பூலாணி) மாரியூர் கடற்கரைகளில் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், கேரளா, கர்நாடகம் போன்று வட மாநிலங்களைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கானவர்கள் கடற்கரைக்கு அதிகாலையிலேயே வருகை தந்து கடலில் நீராடி தங்களது முன்னோர்களை நினைவு கூர்ந்து சாரை ... சாரையாக ... தர்ப்பணம் செய்து வந்தனர்.
  ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement