பரமக்குடியில் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் ஆய்வு
பரமக்குடி நகராட்சியில் ரூ.417 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சியில் , ஊரக வளர்ச்சித்துறை , நகராட்சி நிர்வாகத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின் போது , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பரமக்குடி நகராட்சி நிர்வாகம் மூலம் ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகர்புற சுகாதார மைய கட்டடத்தை பார்வையிட்டத்துடன், அதன் உட்கட்டமைப்பு வசதிகளின் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் கேட்டறிந்ததுடன் பணியினை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார்.
பின்னர் பொதுப்பணித் துறையின் மூலம் ரூ 138 இலட்சம் மதிப்பீட்டில் வணிகவரித்துறைக்கான அலுவலக கட்டடத்தின் கட்டுமான பணியினை பார்வையிட்டதுடன், பணிகள் நடைபெறும் பொழுது பொறியாளர்கள் ஆய்வு செய்து திட்டமிட்ட காலத்திற்குள் பணிகளை முடித்திடும் வகையில் பணி மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரைத்தினார்.அதனை தொடர்ந்து, ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் நென்மேனி ஊராட்சியில் மரைக்காயர்பட்டினம் , உரப்புளி செல்லும் வழியில் ரூ.204 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்தை பார்வையிட்டு பணியினை உரிய காலத்திற்கு முடித்திட அலுவலர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு , பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வைத்தியலிங்கம் , பரமக்குடி நகராட்சி ஆணையர் இராஜமாணிக்கம் , பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் .ஐஸ்வர்யா , பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பு கண்ணன், செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் .
கருத்துக்கள்