ஏர்வாடியில் அரசு மனநல அவசர சிகிச்சை, மீள் மையம் திறப்பு விழா.
தமிழ்நாடு அரசு சுகாதாரம் , குடும்ப நலத்துறை செல்லமுத்து அறக்கட்டளை சார்பில் ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் அரசு மனநல அவசர சிகிச்சை, மீள்மையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. கோவிந்தராஜலு துவக்கி வைத்தார். செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனர் ராமசுப்ரமணியன், தேசிய சுகாதார இயக்க மனநல சுகாதார திட்ட கண்காணிப்பு, மதிப்பீட்டு அலுவலர் கார்த்திக் தெய்வநாயகம், குடும்ப நலத்துறை (பொறுப்பு) இணை இயக்குநர் சிவானந்த வல்லி, மனநல மருத்துவ நிபுணர் பெரியார் லெனின், கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி முதல்வர் சுமையா தாவூது, ஏர்வாடி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ஜவாஹீர் ஹூசைன், செல்லமுத்து அறக்கட்டளை ஆராய்ச்சி பவுண்டேஷன் நிகழ்ச்சி இயக்குநர் ஜனார்தன் பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
கருத்துக்கள்