advertisement

பரமக்குடி அருகே பைக் , கார் மோதிய விபத்து - 2 பேர் உயிரிழப்பு

செப். 03, 2025 4:59 முற்பகல் |

பரமக்குடி அருகே இருசக்கர வாகனம் , கார் மோதிய விபத்தில் தொழிலாளிகள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே வெங்காளூர் கிராமத்தைச் சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் மலையரசன் (50) , பூவேந்திரன் (70) இருவரும்   இரு சக்கர வாகனத்தில் கரும்பு வெட்டுவதற்காக மஞ்சக்கொல்லை கிராமத்திற்கு சென்றனர்.அது சமயம், மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் இலந்தைகுளம் என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்ற போது மதுரையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற கார் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இருவரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். விபத்து காரணமாக மதுரை - பரமக்குடி நான்கு வழிசாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து பரமக்குடி டவுன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பரமக்குடி பகுதியில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு கார் - மினிலாரி மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர் விபத்து நடைபெறுவதால் பரமக்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement