உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத மாவட்ட நிர்வாகம் -விசிக கண்டனம் .!!!.
விசிக கன்னியாகுமரி மாநகர் மாவட்ட செயலாளர் அல். காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி நகராட்சி பகுதியில் அமைந்துள்ள கட்டிடங்கள் (CRZ) கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு எதிராக விடுதிகள் மற்றும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதுமதுரை உயர்நீதிமன்றம் 70-க்கும் மேற்பட்ட கட்டிடங்களை இடித்து மாற்றுவதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆனால் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையிலான மாவட்ட நிர்வாகம் உயர்நீதிமன்ற தீர்ப்பை சாக்கு போக்கு சொல்லி காலில் போட்டு மிதிப்பது ஏன்?கடல் அலை மட்டத்திலிருந்து 50 மீட்டர் உயரம் அல்லது 500 மீட்டர் தூரத்தில் எவ்வித கட்டிடங்களும் கட்ட கூடாது என்ற உத்தரவை மதிக்காமல் கட்டிடங்கள் கட்டி உள்ளார்கள், கட்டிக் கொண்டிருக்கின்றனர். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.அதுபோல் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட வளர்ச்சி விதிகள் 2019 க்கு எதிராக கன்னியாகுமரி நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் கட்டிடங்கள் கட்டப்பட்டு வரும அவலம் ஏற்பட்டுள்ளது.
இந்த கட்டிடங்களை உடனடியாக சீல் வைக்க வேண்டும்.மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேர் ரத வீதியில் பொதுமக்களுக்கு இடையுறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதற்கு தடை விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்மேலும் கன்னியாகுமரி நகராட்சியில் வீட்டிற்கு அனுமதி பெற்று விடுதிகளாக செயல்படும் சட்டவிரோத கட்டிடங்களை உடனடியாக சீல் வைக்க வேண்டும் இல்லையென்றால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொது மக்களையும் ஜனநாயக சக்திகளையும் திரட்டி போராட்டத்தை முன்னெடுக்கும் என கூறியுள்ளார்.
கருத்துக்கள்