தோவாளை மலர்சந்தையில் பூக்களின் விலை உயர்வு
ணம் பண்டிகை சிறப்பு வியாபாரம் தொடக்கத்தினை முன்னிட்டு கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
பட கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்காகப் பூக்கள் வாங்கிச் செல்லப்படுகின்றன.
கேரளாவில் புகழ்பெற்ற ஓணம் பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்காக பூக்கள் சிறப்பு விற்பனை தோவாளை மலர் சந்தையில் தொடங்கி உள்ளது. ஓணம் பண்டிகையின் போது பலவிதமான வண்ண வண்ண பூக்களால் அத்தப்பூக்கோலம் வீடுகளில் விடப்படும். அதற்காக பலவிதமான பூக்கள் தோவாளை மலர் சந்தையில் வர வைக்கப்பட்டு உள்ளது. ஓணம் பண்டிகைக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பிச்சி மல்லிகை பூக்களுக்கு நிகராக மற்ற பூக்களின் விலையும் உயர்ந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. தோவாளை மலர்ச் சந்தையில் நேற்று மல்லிகை ரூ. 350க்கும், பிச்சி ரூ.400க்கும், சம்பங்கி ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி,
மல்லிபூ - 800
பிச்சிபூ- 500
அரளி பூ- 150
வாடா மல்லி- 300
கேந்தி- 110
சம்பங்கி- 300
முல்லை- 800
ரோஸ்- 200
ஸ்டம்ப் ரோஸ் - 350
துளசி - 50
கருத்துக்கள்