advertisement

புகார் பதிவு செய்யவில்லை என்றால் கடும் நடவடிக்கை : தூத்துக்குடி எஸ்.பி.,  தகவல்!

மே 03, 2025 3:25 முற்பகல் |

 

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் புகார் பதிவு செய்யவில்லை என்று ஏதேனும் புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் சில சம்பவங்கள் காவல் துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த சம்பவங்களில் போலீசார் மீது எந்தவித தவறும் இல்லை என்பதும், அந்த சம்பவங்களில் நடந்த உண்மைத் தன்மை குறித்து விளக்கப்பட்டு உள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதனால் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வரவேற்பாளர்கள் பணியில் இருப்பார்கள். இதனால் மக்கள் காவல் நிலையங்களில் மனு கொடுக்க செல்லும்போது அனைத்து மனுக்களும் கம்ப்யூட்டரில் பதிவு செய்து ரசீது கொடுக்கப்படும். இதனால் காவல் நிலையங்களில் புகார் மனு பெற மறுத்து நிராகரிப்பது குறைந்துள்ளது. அதுபோன்று புகார் பதிவு செய்யவில்லை என்று ஏதேனும் புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
 
மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் முழுநேரம் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். அதேபோன்று உட்கோட்ட அளவிலான சோதனைச் சாவடிகளில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement