செங்கோல் ஆதீன திருமடத்தின் குருமுதல்வர் குருபூஜை விழா
மே 03, 2025 7:30 பிற்பகல் |
இன்று திருகைலாய பரம்பரை ஸ்ரீ சத்யஞான தரிசினிகள் சந்தானம் செங்கோல் ஆதீன திருமடத்தின் குருமுதல்வர் அவர்களின் குருபூஜை விழா தற்போதைய 103 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சார்ய சுவாமிகளின் ஆசி உரையுடன் சிறப்பாக நடைபெற்றது.
இதில் இதில் இந்து முன்னணி மாநில துணை தலைவர் ஜெயக்குமார்,மாநில செயலாளர் குற்றாலநாதன்.நெல்லை கோட்ட செயலாளர் க.பிரம்மநாயகம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ராகவேந்திரா ஆகியோர் கலந்து கொண்டு சுவாமிகளின் ஆசி பெற்றனர்.
மேலும் ஜூன் 22 மதுரையில் நடக்கவிருக்கும் மாபெரும் முருக பக்தர்கள் மாநாட்டின் அழைப்பிதழை குருமகா சன்னிதானத்திடம் வழங்கி செங்கோல் மடத்தின் குருமுதல்வர் திருப்பாதத்தில் வைத்து மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டி பூஜிக்கப்பட்டது.
கருத்துக்கள்