advertisement

திருச்செந்தூரில் குடமுழுக்கு விழா பணிகளை கனிமொழி ஆய்வு!

ஜூலை 04, 2025 3:22 முற்பகல் |

 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு முன்னேற்பாடு பணிகளை கனிமொழி கருணாநிதி எம்.பி.,  ஆய்வு செய்தார். 

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா வருகின்ற (07/07/2025) அன்று வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. விழாவில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில், குடமுழுக்கு முன்னேற்பாடு பணிகளை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement