பிரதமர் மோடி வருகையை ஒட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு
தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை வருகிற 26 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். அதற்கான விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை வருகிற 26 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.இந்நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். இவ்விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதையொட்டி பிரம்மாண்டமான விழா மேடை, சுமார் 10 ஆயிரம் பேர் அமரக் கூடிய வகையில் விழா அரங்கில் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விமான நிலையத்தை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமரின் பாதுகாப்பு படை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
கருத்துக்கள்