advertisement

ஆடி அமாவாசை - தூத்துக்குடியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஜூலை 24, 2025 6:16 முற்பகல் |

 


ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கடலில் ஏராளமானோர் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கடற்கரை மற்றும் ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை, மற்றும் துறைமுக கடற்கரையில் ஏராளமானோர் காலையிலே திரண்டு வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். 

மேலும் தாமிரபரணி நதியின் ஆற்றங்கரைகளான ஸ்ரீவைகுண்டம், ஏரல் ஆத்தூர் உட்பட பல இடங்களில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.  

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement