தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்
தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் மற்றும் வாகன நிறுத்தங்கள் குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு.
தூத்துக்குடி பனிமய மாதா கோவில் 443வது திருவிழா இந்த ஆண்டு 25.07.2025 முதல் 06.08.2025 வரையில் நடைபெறயிருக்கிறது. திருவிழாவில் மக்கள் கூட்டம் அதிகமாக வரும் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் நாட்களான 26.07.2025, 03.08.2025, 04.08.2025 மற்றும் 05.08.2025 ஆகிய நாட்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் போக்குவரத்து மாற்றம் (Traffic Diversion), வாகன நிறுத்தங்கள் (Parking Slot), மற்றும் போக்குவரத்து ஒழுங்கு (Traffic Regulation) சம்மந்தமாக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மாற்று வழித்தடங்கள்.
1. தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து திரேஸ்புரம் செல்லும் நகர பேருந்துகள் WGC Road, Old Municipal Office Jn, 1ம் கேட் ,மட்டக்கடை, கால்டுவெல் பள்ளி ஜங்ஷன் வழியாக திரேஸ்புரம் செல்ல வேண்டும்.
2. திரேஸ்புரத்திலிருந்து தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்திற்கு வரும் நகர பேருந்துகள் பக்கிள் சேனல் அருகில் உள்ள ரோடு வழியாக கருத்தப்பாலம், புதிய பேருந்து நிலையம், 4ம் கேட் வழியாக செல்ல வேண்டும்.
3. தூத்துக்குடி அண்ணா பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய துறைமுகம், தெர்மல்நகர், மற்றும் முத்தையாபுரம் மார்க்கமான செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் WGC Road, Old Muncipal JN, Fire Service Jn, அந்தோணியார் கோவில் ஜங்ஷன், ஜார்ஜ் ரோடு அல்பர்ட் & கோ ஜங்ஷன், காமராஜ் கல்லூரி ஜங்ஷன் வழியாக திருச்செந்தூர் ரவுண்டானா சென்று செல்ல வேண்டும்.
அல்லது கூட்டம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் ஜார்ஜ் ரோடு வழியாக பேருந்து செல்ல முடியாதபட்சத்தில் Fire Service Jn, அந்தோணியார் கோவில் ஜங்ஷன், வி.இ.ரோடு, தெற்கு காவல் நிலையம் ஜங்ஷன், காமராஜ் கல்லூரி ஜங்ஷன் வழியாக திருச்செந்தூர் ரவுண்டானா சென்று செல்ல வேண்டும்.
4. புதிய துறைமுகம் மற்றும் தெர்மல்நகரிலிருந்து வரும் நகர பேருந்துகள் தெற்கு பீச் ரோடு (ரோச் பார்க்) வழியாக வருவதற்கு அனுமதியில்லை. அவைகள் நகர்விலக்கு, திருச்செந்தூர் ரவுண்டானா, காமராஜ் கல்லூரி, அக்ஸார் ஜங்ஷன் வழியாக அண்ணா பேருந்து நிலையம் செல்ல வேண்டும். மேலும் ஜார்ஜ் ரோடு - அல்பர்ட் & கோ ஜங்ஷன், PPMT ஜங்ஷன் வழியாக வருவதற்கு அனுமதியில்லை.
5. GC ரோட்டிலிருந்து மாதா கோவில், தெற்கு பீச் ரோடு (ரோச் பார்க்) வழியாக புதிய துறைமுகம் செல்பவர்கள் மாதா கோவில் வழியாக செல்வதற்கு அனுமதியில்லை. அவர்கள் மாற்றுப்பாதையாக பழைய முனிசிபல் ஆபீஸ் ஜங்ஷன், Fire Service Jn, PPMT ஜங்ஷன், லயன்ஸ் டவுண், ரோச் காலனி, SRM ஹோட்டல் ஜங்ஷன், தெற்கு பீச் ரோடு (ரோச் பார்க்) வழியாக செல்ல வேண்டும். கூட்டம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் Fire Service Jn, அந்தோணியார் கோவில் ஜங்ஷன், வி.இ.ரோடு, காமராஜ் கல்லூரி ஜங்ஷன் வழியாக திருச்செந்தூர் ரவுண்டானா சென்று செல்ல வேண்டும்.
6. வடக்கு பீச் ரோட்டிலிருந்து மாதா கோவில் வழியாக தெற்கு பீச் ரோடு செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையாக இந்திராகாந்தி சிலை ஜங்ஷன், ரயில்வே ஸ்டேஷன், காசுக்கடை பஜார், பழைய முனிசிபல் ஆபீஸ், Fire Service Jn, PPMT Jn, லயன்ஸ்டவுண், ரோச் காலனி, SRM Hotel வழியாக தெற்கு பீச் ரோடு செல்ல வேண்டும்.
7. விழா நடைபெறும் குறிப்பிட்ட நாட்களில் சரக்கு வாகனங்கள் மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் விழா நடைபெறும் பகுதிகளுக்கு வர முற்றிலும் அனுமதி இல்லை.
மேலும் விழா நடைபெறும் நாட்களில் தேவைக்கேற்ப போக்குவரத்து மாற்றியமைக்கப்படும்.
வாகனம் நிறுத்தும் இடங்கள்
திருவிழா நடைபெறும் குறிப்பிட்ட நாட்களில் பொது மக்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக 10 இடங்களில் வாகன நிறுத்த (Parking) வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரங்களில் நிறுத்தாமல், அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தங்களில் (Parking) நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
1. வ.உ.சி சாலை ((WGC Road)) வழியாக வரும் வாகனங்கள்
தூத்துக்குடி வ.உ.சி (WGC Road) சாலை வழியாக மாதா கோவில் வரும் வாகனங்கள் பழைய முனிசிபல் ஆபீஸ் ஜங்ஷன், வடக்கு காட்டன் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு வழியாக சென்று புனிதபிரான்ஸிஸ் சேவியர் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, பிரெஞ்சு சேப்பல் தெரு வழியாக சென்று சின்னக்கோவில் வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்தவும் மேலும், தூத்துக்குடி வ.உ.சி (WGC ரோடு) சாலை வழியாக பழைய முனிசிபல் ஆபீஸ் ஜங்ஷன், Fire Service ஜங்ஷன், தெற்கு காட்டன் ரோடு வழியாக சென்று St.பீட்டர் கோவில் தெருவிலுள்ள லசால் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், தெற்கு காட்டன் ரோடு, PPMT ஜங்ஷன் வழியாக சென்று ஜார்ஜ் ரோட்டிலுள்ள தருவைமைதானத்தில் இரண்டு சக்கரவாகனங்கள் மற்றும் நான்கு சக்கரவாகனங்களையும், PPMT ஜங்ஷன் வழியாக சென்று லயன்ஸ் டவுணிலுள்ள காரப்பேட்டை ஆண்கள் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கரவாகனங்கள் மற்றும் நான்கு சக்கரவாகனங்களையும் நிறுத்தவும்.
2. வடக்கு கடற்கரை சாலை வழியாக வரும் வாகனங்கள்
தூத்துக்குடி வடக்கு கடற்கரை சாலை வழியாக மாதா கோவில் வரும் வாகனங்கள் வடக்கு கடற்கரை சாலையிலுள்ள கால்டுவெல் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும், வடக்கு கடற்கரை சலையிலுள்ள முத்து நகர் கடற்கரையில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்குசக்கர வாகனங்களையும், வடக்கு கடற்கரை சாலையிலுள்ள துறைமுகம் சமுதாய நலக்கூடம் வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், வடக்கு கடற்கரை சாலை, இந்திராகாந்தி சிலை சந்திப்பு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, பிரெஞ்சு சேப்பல் தெரு வழியாக சென்று சின்னக்கோவில் வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்தவும்.
3.தெற்கு கடற்கரை சாலை வழியாக வரும் வாகனங்கள்
தெற்கு கடற்கரை சாலை வழியாக மாதா கோவில் வரும் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மீன்பிடி துறைமுகம் வளாகம் மற்றும் ரோச் பார்க்கில் நிறுத்தவும். மீன்பிடி துறைமுகத்திற்கு வடக்கே வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.
4.ஜார்ஜ் ரோடு வழியாக வரும் வாகனங்கள்
ஜார்ஜ் ரோடு வழியாக மாதா கோவில் வரும் வாகனங்கள் ஜார்ஜ் ரோட்டிலுள்ள தருவைமைதானத்தில் இரண்டு சக்கரவாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும், PPMT ஜங்ஷன் வழியாக சென்று ஜார்ஜ் ரோட்டிலுள்ள PPMT ஜங்ஷன், தெற்கு காட்டன் ரோடு வழியாக சென்று St.பீட்டர் கோவில் தெருவிலுள்ள லசால் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கரவாகனங்களையும், PPMT ஜங்ஷன் வழியாக சென்று லயன்ஸ் டவுணிலுள்ள காரப்பேட்டை ஆண்கள் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கரவாகனங்கள் மற்றும் நான்கு சக்கரவாகனங்களையும் நிறுத்தவும்.
முக்கிய பாதுகாப்பு ஏற்பாடுகள்
திருவிழாவிற்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்பை கருதியும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டும் மற்றும் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பொருட்டும், வாகனங்கள் வரும் வழிப்பாதைகள், வாகனங்கள் நிறுத்துமிடங்கள், பொருட்காட்சி திடல், கடற்கரை பகுதி, பொதுமக்கள் வந்து செல்லும் வழிகள், மற்றும் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், மேலும் சீருடை அணிந்த மற்றும் சாதாரண உடையணிந்த ஆண், பெண் கவலர்களை பணியமர்த்தி கண்காணிக்க நடவக்கை எடுக்கப்பட்டுள்ளது.*
தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழா பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் நடைபெற காவல்துறை சூழ்நிலைக்கேற்ப மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் காவல்துறைக்கு தகுந்த ஒத்துழைப்பு கொடுத்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
கருத்துக்கள்