advertisement

இரட்டை கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

செப். 02, 2025 2:41 முற்பகல் |


 
இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2பேருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் கால்வாய் பகுதியைச் சேர்ந்த சிவசுப்பு மகன் சண்முகம் (67/13) மற்றும் நம்பி மகன் பட்டமுத்து  (32/13) ஆகியோரை கடந்த 25.01.2013 அன்று முன்விரோதம் காரணமாக கால்வாய் மாதங்கோவில் தெருவில் வைத்து அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் கால்வாய் பகுதியைச் சேர்ந்தவர்களான நம்பி மகன் மணி (57/2025), இசக்கி மகன் மாசாணம் (38/2025) ஆகியோர் உட்பட மொத்தம் 15 எதிரிகளை செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி  தாண்டவம்  இன்று குற்றவாளிகளான மணி மற்றும் மாசாணம் ஆகிய இருவருக்கும் தலா இரட்டை ஆயுள்தண்டனை மற்றும் தலா ரூபாய் 20,000 அபராதம் விதித்தும் ஏனைய 13பேரை விடுதலை செய்து உத்தரவிட்டும் தீர்ப்பு வழங்கினார். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement