தூத்துக்குடியில் வருவாய் துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்
செப். 03, 2025 5:51 முற்பகல் |
தூத்துக்குடியில் வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில், 48 மணி நேர தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுவதால் அரசு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக வருவாய் துறையில், காலியாக பணியிடங்களை நிரப்ப வேண்டும், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த உரிய கால அவகாசம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில், 48 மணி நேர தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் படி தூத்துக்குடி மாவட்டத்தில் 48 மணி நேர தொடர் வேலை நிறுத்த போராட்டம் இன்று தொடங்கியது. இதனால் வருவாய்த்துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
கருத்துக்கள்