தூத்துக்குடியில் காவல் துறை வாகனங்களை மாவட்ட எஸ்.பி. ஆய்வு
செப். 04, 2025 3:56 பிற்பகல் |
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் வைத்து மாதாந்திர ஆய்வுக்கூட்டம் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் இன்று மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் வைத்து காவல்துறை வாகனங்களை ஆய்வு செய்து, வாகன ஓட்டுனர்களிடம் வாகனங்களில் ஏற்பட்ட குறைபாடுகளை கேட்டறிந்து சீர் செய்யுமாறும், சீட் பெல்ட் அணிந்து நான்கு சக்கர வாகனத்தையும், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தையும் இயக்குமாறு உத்தரவிட்டும், வாகனங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.
கருத்துக்கள்