advertisement

துறைமுகசபை நிர்வாகத்தை கண்டித்து மே 7 ல் ஆர்ப்பாட்டம்

ஏப். 18, 2026 1:26 பிற்பகல் |

தூத்துக்குடி துறைமுகசபை நிர்வாகத்தை கண்டித்து மே 7 ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என துறைமுகசபை ஒப்பந்த தொழிலாளர்கள் நலச்சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து துறைமுகசபை ஒப்பந்த தொழிலாளர்கள் நலச்சங்கம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது,துறைமுகத்தில் நடைபெறும் ஊழலை கண்டித்தும், துறைமுகத்தில் உள்ள கலையரங்கத்தை இடிக்கும் நோக்கில் செயல்படும் சில அதிகாரிகளை கண்டித்தும், துறைமுகத்தில் பணியிலிருக்கும் போது இறப்பவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதை கண்டித்தும், துறைமுகத்தில் பல கோணங்களில் கோடிக்கணக்கான பணம் செலவு செய்யப்படுவதை கண்டித்தும் தூத்துக்குடியில் மே 7 ம் தேதி மதியம் 12 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் சிஇசி அமைப்பு தேசிய தலைவர் எஸ் ஜோன் அமைப்பு பொது செயலாளருமான ஞானசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகிறார். பெருமாள், கருணாநிதி, நடராஜன், அலெக்சிங், பாபு, செந்தில்சுரேஷ்,ஆகியோர் தலைமை தாங்கி பேசுகிறார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்தில் துறைமுகசபை ஊழியர்கள்,அரசியல்கட்சியினர்,சமுதாய அமைப்புகள் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement