advertisement

பறக்கும்படை சோதனை : தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.1.29 கோடி பறிமுதல்

ஏப். 19, 2026 3:16 முற்பகல் |

 


தூத்துக்குடி மாவட்ட்த்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.1.29 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட  ஆட்சியர் விஷு  மகாஜன் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி, நேற்று (18.04.2026) வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட மொத்த ரொக்கத் தொகை ரூ. 1,29,14,818/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், விதிமுறைகளை மீறி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 5,68,950/- மதிப்பிலான மதுபானங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதே வேளையில், பறிமுதல் செய்யப்பட்ட தொகையில் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த நபர்களிடம் இருந்து பெறப்பட்ட ரூ. 84,93,918/- ரொக்கத் தொகை மற்றும் ரூ. 8,94,200/- மதிப்பிலான பொருட்கள் மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷு  மகாஜன் தெரிவித்துள்ளார். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement