advertisement

திருச்செந்தூர் கோவிலில் அமைச்சர் ராஜ்நாத்சிங் தரிசனம்

ஏப். 20, 2026 3:57 முற்பகல் |

 

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம் செய்தார்.

 மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்தத பின்னர் க்ஷ வீருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்குக் கோவில் நிர்வாகம் மற்றும் அர்ச்சகர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற அவர், மூலவர் சுப்பிரமணிய சுவாமி மற்றும் சண்முகருக்கு நடைபெற்ற சிறப்புப் பூஜைகளில் கலந்து கொண்டு மனமுருகி வழிபட்டார். தரிசனத்திற்குப் பிறகு தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட அவர், " திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வழிபாடு செய்ததை பாக்கியமாகக் கருதுகிறேன். இந்தத் திருக்கோவிலின் தெய்வீக ஆற்றலை உணர்ந்ததில் மிகுந்த மகிழ்ச்சி" எனத் தெரிவித்துள்ளார். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement