தூத்துக்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் போக்ஸோவில் கைது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே 11 வயது சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொண்ட தொழிலாளியை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள மேலபனைகுளம் பகுதியினை சேர்ந்தவர் டேவிட் (61). தொழிலாளியான இவர், சம்பவத்தன்று 11 வயது சிறுமியிடம் தவறான எண்ணத்துடன் பேசி, அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி, நடந்த சம்பவத்தை உடனடியாகத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்துச் சிறுமியின் தாயார் சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் டேவிட் சிறுமிக்குத் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, டேவிட் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். கைதான டேவிட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.





கருத்துக்கள்