விடுமுறை தினம் : திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
ஏப். 27, 2026 4:37 முற்பகல் |
திருச்செந்தூர் முருகன் கோவிலில், கோடை விடுமுறை மற்றும் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், நேற்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதாலும் அதிகாலையிலிருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கடலில் புனித நீராடியும், நாழிக்கிணற்றில் நீராடியும் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், சுமார் 4 மணி நேரத்திற்குப் பிறகே சுவாமியை தரிசிக்க முடிந்தது.
கோவில் நடை வழக்கம்போல் அதிகாலை 4 மணிக்குத் திறக்கப்பட்டு விஸ்வரூபம் மற்றும் உதய மார்த்தாண்ட அபிஷேகம் உள்ளிட்ட கால பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன.





கருத்துக்கள்