advertisement

தூத்துக்குடியில் வெள்ளத் தடுப்புப் பணிகளை ஆட்சியர் ஆய்வு

அக். 22, 2026 4:04 முற்பகல் |

 


தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று (21.10.2026) வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளத் தடுப்பு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள காலாங்கரை ஓடை, கழுகு ஓடை, கழுதை ஓடை, பெரியபள்ளம் ஓடை மற்றும் பண்டாரம்பட்டி குளத்திற்கு வரும் நீர்வரத்து ஓடை, எஸ்.வி குளம், மாடன்சாமி குட்டத்து குளம், மீளவிட்டான் ஓடையிலிருந்து பக்கிள் ஓடையினை இணைக்கும் 4வது கேட் பகுதியில் உள்ள கால்வாய் ஆகிய பகுதிகளில் பார்வையிட்டு, மதகுகள் மற்றும் நீர்வழித் தடங்களை சீரமைத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement