தூத்துக்குடி : தசரா திருவிழா அம்மனுக்கு- சிறப்பு பூஜை அன்னதானம்
தூத்துக்குடியில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழா கடந்த பத்தாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 20ஆம் தேதி சூரசம்ஹாரம் நடந்தது 21 ஆம் தேதி அனைத்து கோவில்களிலும் அலங்கரிக்கப்பட்ட சப்பரம் வீதி உலா வந்தது .
இதை முன்னிட்டுதூத்துக்குடி கிப்சன் புரம் இளைஞர் குழு சார்பாக 57வது ஆண்டு தசரா சப்ர பேரணி தபசு மண்டபம் முன்பு நடைபெற்றது இதை முன்னிட்டு தூத்துக்குடி வட பாகம் சந்தன மாரியம்மன் கோவில் மட்டக்கடை உச்சினிமாகாளி அம்மன் கோவில் வடக்கு வீதி முத்தாரம்மன் கோவில் மேலூர் பத்ரகாளி அம்மன் கோவில் ஆகிய திருக்கோவிலூரில் உற்சவ சப்பரத்திற்கு தாரை தப்பட்ட முழங்க வரவேற்பு கொடுக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது.
பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது இந்நிகழ்ச்சிக்கு தசரா குழு தலைவர் ராமராஜன் தலைமை தாங்கினார் தூத்துக்குடி ஸ்ரீ சுப்பிரமணியசாமி மகமை பரிபாலன சங்க செயலாளர் எம். எஸ். எஸ். கந்தப்பன் கலந்துகொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் விவேகம் டிராவல்ஸ் அதிபர் விவேகம் ரமேஷ்.சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி .பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார். மற்றும் தொழிலதிபர்கள் ரமேஷ். எம். வெங்கடேஷ் .டி .எம் .சதாசிவம். செந்தில் முருகன். சிவசாரியார் .எம் குமார் பட்டர். ஆர் .கணபதி. மற்றும் இளைஞர் குழுவினர் கலந்து கொண்டனர்





கருத்துக்கள்