advertisement

பெண்கள் நலனுக்கு எதிராக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

டிச. 06, 2023 5:43 முற்பகல் |

சேர்வைக்காரன்மடத்தில் பெண்கள் நலனுக்கு எதிராக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி  மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி காமராஜர் நகரில் டாஸ்மாக் கடை உள்ளது.மேற்படி கடந்த ஆட்சியில் ஊராட்சி மக்களின் கோரிக்கையை ஏற்காமல் ஆரம்பிக்கப்பட்டது.எளிய மக்கள் சுமார் 75 குடும்பங்கள் வாழ்ந்து வரும் இந்த காமராஜர் நகர் மக்களுக்கு ஊராட்சியால் மகளிர் பொதுகழிப்பிடம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த வருடமும் சுமார் 1,75000செலவில் ஊராட்சி மூலம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.இந்த கழிப்பிடத்தின் அருகே சுமார் 50மீட்டர் அளவில் இந்த டாஸ்மாக் கடை 10144 உள்ளது.இயற்கை உபாதையை கழிக்க பெண்கள் அஞ்சி அஞ்சி செல்லும் நிலைமை உள்ளது.மேலும் ஊராட்சி நர்சரியும் 50மீட்டரில் அமைந்துள்ளது.இப்போது அது விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கும் தினமும் பல பெண்களும் வேலை செய்து கொண்டி வருகிறார்கள்.மேலும் நம்மாழ்வார் நகர் பெண்கள் இந்த வழியாக ஊராட்சிக்கு வருகிறார்கள். இந்த டாஸ்மாக் கடை வந்த பிறகு குற்றச்செயல்களும் அதிகரித்து வரும் நிலையில் உள்ளது.கடந்த மாதமும் இதன் அருகே ஒரு எப்ஐஆர் பதிவாகி உள்ளது.மேலும் ஹச்எஸ்ஆர் ரெக்கார்டு கொண்ட கும்பல்கள் ஆதிக்கம் நிறைந்ததாக காணப்படுகிறது.டாஸ்மாக் கடை அருகே செல்லும் ரோட்டில் பகல் 12மணிக்கு நடுரோட்டில் பெண்கள் செல்ல முடியவில்லை.குடிப்பவர்களில் வீதியில் ஆங்காங்கே புதர்களில் இருந்து குடிக்கின்றனர். குடித்துவிட்டு பாட்டிலை நடுரோட்டில் சக்கம்மாள்புரம் போகும் பாதையில் வீசி செல்கின்றனர்.மேலும் அருகில் கம்பி போடப்பட்ட குட்டி பார் போல கடையும் உள்ளது.மக்கள் களம் நிகழ்ச்சியில் இந்த ஊராட்சி பெண்கள் சார்பில் கனிமொழி எம்.பி., ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ,மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் முன்னிலையில் உபதலைவர் ஏஞ்சலின்ஜெனிட்டா சார்பில் அளிக்கப்பட்டது.

மேலும் கடந்த திங்கள்தின கோரிக்கையிலும் வலியுத்தப்பட்டு மனு அளிக்கப்பட்டது.  முதலமைச்சர் ஸ்டாலின் மக்கள் பிரச்சனைக்குரிய கடைகளை அகற்ற  இந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்ததையும்,கனிமொழி எம்.பி இந்த கடையை மக்கள் களத்தில் அப்புறப்படுத்த வலியுத்தியதையும் மாவட்ட ஆட்சியர் பெண்கள் நலனுக்கு எதிராகவும் ஹச்எஸ்ஆர் ரெக்கார்டு கும்பல்கள் ஆதிக்கத்தையும் மற்றும் பொதுமக்கள் செல்லும் சாலையில் இடையூராக உள்ளதையும் பெண்கள் பொது  கழிப்பிடம் ,நர்சரி அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை 10144ஐ அகற்ற வைண்டும் என சேர்வைக்காரன்மடம் ஊராட்சி உபதலைவர் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement