advertisement

தூத்துக்குடி சிவன்கோவில் ஸ்ரீ துர்க்கை திருவிளக்கு பூஜை

ஆக. 03, 2024 3:10 முற்பகல் |

தூத்துக்குடி சிவன்கோவில் ஸ்ரீ துர்க்கை 53 வது ஆண்டு விழா அமைச்சர் கீதாஜீவன் திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ துர்க்கை அம்பிகை 53 வது ஆண்டு விழா நடைபெற்றது. ஆடி மாதம் 16 ம் தேதி இரவு 6.30 மணி முதல் 7.30 மணிவரை ஊஞ்சல் உற்சவம் தீப பூஜை நடைபெற்றது. 17ம் தேதி  காலை 8.30 மணியளவில் விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், கும்பபூஜை, துர்க்கா ஸூக்தம் ஜெபம், மற்றும் காலை அபிஷேகம், கும்பாபிஷேகம், நடைபெற்றது. 

அதனை தொடர்ந்து இரவு நடைபெற்ற 216 திருவிளக்கு பூஜையை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சருமான கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருவிளக்கு பூஜையை தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார். முன்னதாக விநாயகர், சங்கரராமேஸ்வரர், பாகம்பிாியாள், சன்னதியில் தாிசனம் செய்தார். 

திருவிளக்கு பூஜையில் சிவன்கோவில் நிர்வாக செயல்அலுவலர் தமிழ்செல்வி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், அறங்காவலர் குழு தலைவர்கள் கந்தசாமி, செந்தில்குமார்,  தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மந்திரமூர்த்தி, ஆறுமுகம், ஜெயலட்சுமி, சாந்தி, பாலசங்கர், பாலகுருசாமி, கோபால், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், கவுன்சிலர் சரண்யா, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், ராஜ்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், கோவில் கணக்கர் சுப்பையா, மற்றும் மணி, வேல்பாண்டி, மாாிமுத்து, அல்பட், துர்க்கை அம்பிகை மகளிர் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ துர்கா மகளிர் வார வழிபாட்டு சங்கத்தின் தலைவர் ஜெயராணி, செயலாளர் பெத்தனாட்சி, பொருளாளர் ஜெயா ஆகியோர் செய்திருந்தனர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement