advertisement

திருச்சி சிவாவை கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

ஜூலை 22, 2025 3:24 முற்பகல் |


 
காமராஜரை இழிவாக பேசிய திமுக எம்பி திருச்சி சிவாவை கண்டித்து தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் முதல்வர் காமராஜரை அவதுாறாக பேசிய திருச்சி எம்.பி., சிவாவை கண்டித்து, தூத்துக்குடியில் விவிடி சிக்னல் பேருந்து நிறுத்தம் அருகில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சாமுவேல் ராஜ், மாவட்ட தலைவர் வேல்முருகன், மாநில செயலாளர் தருவை சண்முகவேல், மாநில பொருளாளர் எம்.எஸ்.டி. ரவிசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அகில இந்திய நாடார் பேரவை மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான ஜெயச்சந்திரன், மூத்த வழக்கறிஞர் ஜெயபால், வழக்கறிஞர் டேவிட் கணேசன், தமிழ்நாடு நாடார் பேரவை மாவட்ட தலைவர் சிவா, மாவட்ட செயலாளர் செல்வம், தமிழ்நாடு காமராஜர் பேரவை மாவட்ட இணைச் செயலாளர் ராஜ்குமார், தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு தென்மண்டல தலைவர் கோடீஸ்வரன், தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு மத்திய மாவட்ட துணைச் செயலாளர் அந்தோணி வளன், சந்தனகுமார், காமராஜர் லட்சியப் பேரவை நிறுவனத்தலைவர் பிரசன்னகுமார் ஆகியோர் கலந்து கண்டன உரையாற்றினர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement