விருதுநகர் மாவட்டத்திற்கு ஜூலை 28 ம் தேதி உள்ளூர் விடுமுறை
ஜூலை 22, 2025 11:00 முற்பகல் |
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் வரும் 28-ந் தேதி விமரிசையாக நடைபெற இருக்கிறது. அதையொட்டி, அன்றைய தினம் விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் சுகபுத்ரா அறிவித்துள்ளார்.
அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்டு 9-ந் தேதியை வேலை நாளாகவும் மாவட்ட கலெக்டர் சுகபுத்ரா தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்