ஜக்தீப் தன்கர் ராஜினாமா; எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கிய நாடாளுமன்றம்!
ஜூலை 22, 2025 7:30 முற்பகல் |
குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் நேற்று (21-07-25) மாலை திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். மருத்துவ காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஜக்தீப் தன்கர் தெரிவித்திருந்தாலும், பா.ஜ.க தலைவர்கள் - ஜக்தீப் தன்கர் இடையே ஏற்பட்ட மோதலால் தான் அவர் ராஜினாமா செய்துள்ளார் என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், இரண்டாம் நாளான இன்று (22-07-25) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளுமே மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
கருத்துக்கள்