திண்டுக்கல் - சோற்று சட்டியுடன் காத்திருப்பு போராட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சோற்று சட்டியுடன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியக்கூடிய காலமுறையற்ற ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு, பணி பாதுகாப்பு, காப்பீடு போன்றவற்றை வலியுறுத்தி பல்வேறு கட்டமாக போராட்டங்களை நடத்தி வருகிறது.
அதன் அடிப்படையில் இன்று(22.07.2025) ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
அதன்படி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்களை வலியுறுத்தி கோஷமிட்டனர்.மேலும் காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டார்கள்.
கருத்துக்கள்