தூத்துக்குடியில் கருப்பு முக்காடு அணிந்து ஒப்பாரி போராட்டம்!
ஜூலை 22, 2025 9:42 முற்பகல் |
தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கருப்பு முக்காடு ஒப்பாரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த தேர்தல் வாக்குறுதி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தி குறைந்தபட்ச பென்சனை அகவிலைப்படி வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் வைஜெயந்தி மாலா தலைமையில் கருப்பு முக்காடு ஒப்பாரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் கருப்பசாமி செல்வம், நகரச் செயலாளர் வெனிற்றால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்