advertisement

விருதுநகர் : 20 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிக  ரத்து

ஜூலை 22, 2025 9:18 முற்பகல் |


 
விருதுநகர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் ஆயிரக்கணக்கானோர் பட்டாசு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றன.
 
இதனிடையே, பட்டாசு ஆலைகளில் அடிக்கடி வெடிவிபத்து சம்பவங்கள் நடைபெற்று உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.அதேவேளை, வெடிவிபத்தை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் போர்மேன்கள், பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு தொழிலக பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு பயிற்சி வகுப்புகளில் பல பட்டாசு ஆலை உரிமையாளர்கள் பங்கேற்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், விருதுநகரில் 20 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement