advertisement

சாமி தோப்பு ஆலயத்திற்கு மீண்டும் பேருந்துகளை இயக்க வேண்டும் - ஹிந்து தர்ம பேரவை கோரிக்கை

ஜூலை 22, 2025 4:48 முற்பகல் |

சாமி தோப்பு அய்யா வைகுண்டர் சுவாமி ஆலயத்திற்கு நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என்று  ஹிந்து தர்ம பேரவை சார்பாக அதன் நிறுவனர் தலைவர் மொட்டவிளை ரவிகுமார் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும்.தமிழக போக்குவரத்து கழகத்திற்கும் கொடுக்க பட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாக தெரிவித்தார்.

 கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற ஆலயங்களில் ஒன்றான சாமி தோப்பு அய்யா வைகுண்டர் பதி ஆலயம்.ஆகும்.மேலும் இது நாராயண் சுவாமி பதி(ஆலயங்களில் )தலைமை பதியாக விளங்குகிறது.சாமி தோப்பு ஆலயத்திற்கு குமரி மாவட்டம் மட்டும் இல்லாமல் திருநெல்வேலி.தென்காசி.தூத்து குடி போன்ற வெளி மாவட்டங்களை சார்ந்த அய்யாவின் பக்தர்களும் வந்து வணங்கி செல்கின்றனர்.மேலும் இங்கு தமிழ் மாதங்களில் முதல் ஞாயிற்றுகிழமை தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அய்யாவின் ஆலய பணிவிடைகளில் கலந்து கொண்டு அதன் பின்னர் நடைபெறும் அன்ன பிரசாதங்களையும் உண்டு செல்கின்றனர்.அந்த அளவு புகழ் பெற்ற சாமி தோப்பு நாரயண சுவாமி நிழல் தாங்கல் சுற்றி நான்கு புறமும் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களும் வசித்து வருகின்றனர்.சாமி தோப்பு ஆலயத்திற்கு தினமும் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து 32.தடம் எண் பேருந்து ஆலயத்தின் முன்புறம் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்லும் இதனால் சாமி தோப்பு ஆலயத்தில் பயணிகள்.மாணவர்கள்.பக்தர்கள் என ஏராளமான மக்கள் தடம் எண் 32.பேருந்தில் பயணம் செய்தனர்.ஆனால் இப்போது இந்த பேருந்து நிறுத்த பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பக்தர்களும் மிகவும் சிரம படுகின்றனர்.மேலும் சாமி தோப்பு ஆலயத்தில் இருந்து தினமும் திருச்செந்தூர் செல்லும் பேருந்து அதிகாலை.5.30 மணிக்கு ஆலயத்தின் அருகில் வந்து பயணிகளை ஏற்றிச் செல்லும்.இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து சாமி தோப்பு ஆலயத்தில் இரவு தங்கி அய்யாவை வணங்கி செல்லும் பக்தர்கள் அதிகாலை தங்கள் ஊர்களுக்கு செல்ல வசதியாக இருந்தது 

ஆனால் இப்போது இரண்டு பேருந்துகளும் சாமி தோப்பு ஆலயத்திற்கு செல்வதை  நிறுத்த பட்டுள்ளது.
எனவே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள்.மாணவர்கள் நலன் கருதி அதிகாலை இயக்க பட்ட திருச்செந்தூர் பஸ் மற்றும் 32.தடம் எண் சாமி தோப்பு பஸ் ஆகிய இரண்டும் பேருந்து களையும் மீண்டும் இயக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஹிந்து தர்ம பேரவை சார்பாக கேட்டுக் கொள்கிறோம். என அதில் தெரிவித்தார்
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement