முதலமைச்சர் 3 நாட்களுக்கு மருத்துவர் கண்காணிப்பில் இருப்பார்': மருத்துவமனை புதிய அறிக்கை..!
ஜூலை 22, 2025 5:03 முற்பகல் |
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலிக்கு வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்ட போது லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.இந்நிலையில், முதலமைச்சரின் உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: " முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் மருத்துவமனையில் டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பார். அவர் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். மருத்துவமனையில் இருந்து தனது பணியை தொடர்ந்து மேற்கொள்வார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவருக்கு மேலும் சில பரிசோதனைகளை மேற்கொள்ள இருப்பதாக அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்