இணையத்தை வைரலாகும் பென்குயின் வீடியோ
2007-ல் எடுக்கப்பட்ட ஒரு டாக்குமெண்டரி-யின் பென்குயின் வீடியோ தான் இணையத்தை ஆக்கரமித்துள்ளது.
2007-ஆம் ஆண்டு வெளியான Encounters at the End of the World என்ற டாக்குமெண்டரி, அண்டார்டிகாவில் வாழும் மனிதர்கள், விஞ்ஞானிகள் மற்றும் இயற்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்தப் படத்தை இயக்கியவர் ஜெர்மன் இயக்குநர் Werner Herzog. படம் வெளியான போது பல விஷயங்கள் பேசப்பட்டாலும், அதில் இடம்பெற்ற ஒரு சிறிய பென்குயின் காட்சி அப்போது பெரிதாக கவனிக்கப்படவில்லை என்று சொல்லலாம்.
வீடியோவில் நடந்தது என்ன?
சில பென்குயின்கள் எல்லாம் கூட்டமாக கடலுக்குப் போகின்றன. அங்கு உணவு கிடைக்கும். ஆனால் ஒரு பென்குயின் மட்டும் நின்றுவிடுகிறது. அது கடலை நோக்கி போகாமல், திரும்பி எதிர் திசையில் (மலையை நோக்கி) தனியாக நடக்க ஆரம்பிக்கிறது. அந்த மலை 70–80 கி.மீ. தூரத்தில் இருக்கும். அந்தப் பாதையில் உணவும் இல்லை, உயிர் வாழ வாய்ப்பும் குறைவு. அதாவது அங்கு சென்றால் உயிரோடு வாழமுடியாது என்று தெரிந்தும் அந்த பயணத்தை தேர்வு செய்து தைரியமாக அந்த மலையை நோக்கி நடந்தது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் பென்குயின் என்ன செய்கிறது எதற்காக இப்படி செய்கிறது என்கிற பல விதமான கேள்விகளை கேட்கத்தொடங்கிவிட்டார்கள். அந்த காட்சியை படமாக்கிய இயக்குநர் Werner Herzog அந்தக் காட்சியைப் பார்த்துகூறுகையில் ” இது ஒரு மரணத் தீர்ப்பு (death sentence). அந்தப் பென்குயின் தன்னை அழிக்கும் பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்டது” என தெரிவித்தார்.





கருத்துக்கள்