advertisement

ஆப்கன் மீது பாகிஸ்தான் கொடூர தாக்குதல்

மார். 17, 2026 7:23 முற்பகல் |

ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது நேற்று இரவு பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியது. கடந்த மாத இறுதியில் தொடங்கிய மோதலின் தீவிரமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் எல்லை தாண்டிய மோதல்கள் மற்றும் ஆப்கானிஸ்தானுக்குள் வான்வழித் தாக்குதல்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சர்வதேச நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும், இரு நாடுகளும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் ஆசிய பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன

இந்தத் தாக்குதலுக்கு தலீபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. இதன்படி கிழக்கு ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் எந்த பொதுமக்களின் தளங்களையும் தாக்கவில்லை என்று கூறி, ஒரு மருத்துவமனையை தாக்கியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டை நிராகரித்தது.

இதுதொடர்பாக ஆப்கானிஸ்தானின் துணை அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா பித்ரத் தனது எக்ஸ் வலைதளத்தில், “உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் காபூலில் உள்ள மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. 2,000 படுக்கைகள் கொண்ட வசதியின் பெரும் பகுதிகள் அழிக்கப்பட்டது. இறப்பு எண்ணிக்கை இதுவரை 400 பேரை எட்டியுள்ளது, அதே நேரத்தில் சுமார் 250 பேர் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இதனிடையே மறுவாழ்வு மருத்துவமனை கடுமையாக சேதம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement