மாணவன் பாரதிதாசனுக்கு ரூ.23.95 லட்சம் விடுவிப்பு
மலேசியாவில் படிக்கும் மாணவன் பாரதிதாசனுக்கு ரூ.23.95 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.
அண்ணல் அம்பேத்கர் உயர் கல்வித் திட்டத்தின்கீழ், மலேசியாவில் திசு பொறியியல் மற்றும் மீளுருவாக்கம் பிரிவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் பாரதிதாசன்.
இவர் சில மாதங்களுக்கு முன்பு, தனக்கு அண்ணல் அம்பேத்கர் உயர்கல்வித் திட்டத்தின்கீழ் கிடைக்கக் கூடிய நிதி வரவில்லை. ஆகையால், சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் இருந்த கடன் பெற்று தன்னுடைய ஆராய்ச்சி படிப்பை தொடர்ந்து வருவதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.இந்த வீடியோ தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆகையால், இந்த விவகாரம் ஆளும்கட்சியான தவெக மீதான விமர்சனங்களுக்கு வழி வகுத்தது. அதேசமயம், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, அரசு தரப்பில் அவ்வப்போது விளக்கம் அளித்து வருகிறார்.
இந்நிலையில் மலேசிய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பு பயின்று வரும் மாணவர் பாரதிதாசனுக்கு அயலக கல்வி உதவித்தொகையாக ரூ.23.95 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு கல்விக்காக ஏற்கனவே ரூ.12 லட்சம் விடுவிக்கப்பட்ட நிலையில் மேலும் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
தனக்கான கல்வி நிதி விடுவிக்கப்படவில்லை என மாணவர் பாரதிதாசன் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், தமிழக அரசின் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக சமூக நீதித் துறை தகவல் தெரிவித்துள்ளது.





கருத்துக்கள்