அதிகரிக்கும் கொரோனா தொற்று.. முகக்கவசம் கட்டாயம் இல்லை -மத்திய அமைச்சர் !
இந்தியாவில் தற்போதைக்கு முகக்கவசம் கட்டாயம் இல்லை கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கைகளை மத்திய அரசு செய்துள்ளது.கொரோனா பரவலுக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று மத்திய இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலும் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவை தொடர்ந்து மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள், மற்றும் மருந்துகள், ஆக்சிஜன் வசதி போன்ற வசதி இருப்பை உறுதி செய்யும் பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவில் கடந்த வாரத்தில் மட்டும் 257பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்பொழுது 1009 ஆக அதிகரித்து உள்ளது
கேரளா - 430
மகாராஷ்டிரா: 209
டெல்லி: 99
தமிழ்நாடு -69
பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் தற்போதைக்கு முகக்கவசம் கட்டாயம் இல்லை கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கைகளை மத்திய அரசு செய்துள்ளது.
முகக்கவசம் கட்டாயம் இல்லை
தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC), அவசர மருத்துவ நிவாரணம் (EMR) பிரிவு, பேரிடர் மேலாண்மை பிரிவு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் மத்திய அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றின் நிபுணர்களின் மறுஆய்வுக் கூட்டம் உள்ளிட்டவைகளுடன் சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் (DGHS) தலைமையில் ஆலோசனை நடந்தது.
இதில் இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேலும் பொது சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கையுடனும் உள்ளது. தற்போதைக்கு முகக்கவசம் கட்டாயம் இல்லை கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கைகளை மத்திய அரசு செய்துள்ளது.கொரோனா பரவலுக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று மத்திய இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்