advertisement

சபரிமலையில்  மகர ஜோதி.. பக்தர்கள் பரவசம்

ஜன. 14, 2026 2:38 பிற்பகல் |


 
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த சீசனுக்கான மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் 17-ம் தேதி தொடங்கி டிசம்பர் 27-ம் தேதி வரை நடந்தது.அதை தொடர்ந்து மகர விளக்கு பூஜை வைபவம் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. இந்தநிலையில் மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் இன்று நடைபெற்றது.

இதையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதன்பிறகு வழக்கான பூஜைகள் நடத்தப்பட்டு ஒரு மணிக்கு நடை சாத்தப்பட்டது. பின்பு பிற்பகல் 2.45 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது. அதன்பிறகு 3.08 மணிக்கு மகர சங்கிரம பூஜை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.  

மாலை 6.45 மணியளவில் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. அப்போது வானில் மகர நட்சத்திரம் தோன்றிய நிலையில், பொன்னம்பல மேட்டில் அய்யப்பன் மூன்று முறை மகர நட்சத்திரமாகவும் ஜோதி வடிவிலும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அப்பொழுது சாமியே சரணம் அய்யப்பா..சாமியே சரணம் அய்யப்பா... என பக்தர்கள் எழுப்பிய சரண கோஷம் சன்னிதானம் மட்டுமின்றி சபரிமலை எங்கும் எதிரொலித்தது.  

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement