திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
ஜன. 14, 2026 5:19 முற்பகல் |
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் நேர்த்திக்கடனாக அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஊர்வலமாக குவிந்தவண்ணம் உள்ளனர்.
முருகப்பெருமானுக்கு பிரசித்தி பெற்ற தைப்பூசம் பிப் மாதம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் முருக பக்தர்கள் தொடர்ந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.பொங்கல் திருநாளை முன்னிட்டு நேற்று முதல் கோவிலுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பச்சை நிற மற்றும் காவி நிற ஆடை அணிந்து காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். இதனால் திருச்செந்தூர் கோவில் பக்தர்கள் கூட்டத்தில் நிரம்பியுள்ளது.




கருத்துக்கள்