தமிழகம் முழுவதும் பொங்கல் கொண்டாட்டம்!
தை முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அதிகாலையிலேயே எழுந்து புதுக் கோலமிட்ட பெண்கள், குத்து விளக்கு ஏற்றி பொங்கல் வைத்தனர். சூரிய உதயத்திற்கு முன்பாக பொங்கி வந்த பொங்கலை குலவை போட்டு பெண்கள் வரவேற்றனர். தொடர்ந்து பச்சரிசி பொங்கல், காய்கறிகள், மஞ்சள் கிழங்கு, கரும்பு உள்ளிட்டவற்றை சூரிய பகவானுக்கு படையலிட்டு விவசாயம் செழிக்கவும், உலக நன்மைக்காகவும் பிரார்த்தனை செய்தனர்.நெல்லை ஜங்ஷன் பகுதியில் அதிகாலையிலேயே எழுந்து மக்கள், புத்தாடை உடுத்தி, சூரிய உதயத்திற்கு முன்பாக குடும்பம் குடும்பாக அமர்ந்து பொங்கல் வைத்து வழிபட்டனர். அதேபோல் மதுரை ,கோவை சென்னை திருப்பூர் கன்னியாகுமரி உட்பட பல்வேறு ஊர்களிலும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.




கருத்துக்கள்