நெல்லை டூ தாம்பரத்திற்கு ஜன 18 ல் சிறப்பு ரயில்
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
பொங்கல் பண்டிகைக்கு சென்றவர்கள் திரும்புவதற்கு வசதியாக நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண் 06178) இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் மறுநாள் காலை 3 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
நெல்லையில் இருந்து புறப்படும் இந்த ரயில் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், பாம்புகோவில் சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், திருமங்கலம், மதுரை, சோழவந்தான், கொடை ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த சிறப்பு ரயில் முன்பதிவு நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




கருத்துக்கள்