advertisement

கரூர் : பொதுமக்களுக்கு இடையூறு செய்தவர் கைது

ஜன. 14, 2026 3:17 முற்பகல் |

 

கரூர் மாவட்டம் புகளூர் காகித ஆலை, புன்னம் சத்திரம் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான கார்டன் அருகே சாலையின் நடுவே நின்று கொண்டு மது அருந்திக்கொண்டு பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அதன் பேரில் வேலாயுதம்பாலையம் போலீசார் விரைந்து சென்று மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் மூலிமங்கலம் பகுதியைச் சேர்ந்த செல்லப்பன் (37). கூலித் தொழிலாளி என்றும் போதையில் இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் செல்லப்பனை தீவிரமாக விசாரிக்கின்றனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement