advertisement

அக்னி நட்சத்திரத்துக்கு டாட்டா.. கூலாக மாறிய சென்னை

மே 05, 2025 10:51 முற்பகல் |

 

சுட்டெரித்து வந்த கோடை வெயிலுக்கு மத்தியில் மழை அடித்து நொறுக்கி பல மாவட்டங்களை குளிரச் செய்துள்ளது. இது அடுத்த சில தினங்களுக்கும் தொடரும் என வானிலை மையம் கூல் அப்டேட்டை கொடுத்துள்ளது.

பொதுவாக மார்ச் மாதம் தொடங்கும் கோடை வெயில், இந்த ஆண்டு பிப்ரவரியிலேயே ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு நாளும் வெப்பநிலை ஏறிக் கொண்டே வந்த நிலையில், ஏப்ரல் மாதம் வெயிலின் தாக்கம் உச்சக்கட்டத்துக்கு சென்றது. குறிப்பாக, சென்னை, வேலூர், மதுரை, திருச்சி, நாமக்கல், நெல்லை, ஈரோடு, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை வெயில் சுட்டெரித்தது.

இதனால் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்த சூழலில்தான், நேற்றைக்கு அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தொடங்கியது. ஏற்கனவே அக்னி பகவானின் பார்வையில் தகித்து வந்த தமிழக மக்கள், கத்தரி வெயில் தங்களை என்ன செய்ய காத்திருக்கிறதோ என நினைத்து புலம்பி வந்தனர்.

ஆனால், கத்தரி வெயிலின் முதல் நாளே ட்விஸ்ட் வைத்ததை போல, மழை அடித்து நொறுக்கியது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. குறிப்பாக, சென்னையில் இடைவிடாமல் தொடர்நது பெய்த மழையால் ஊட்டி போல க்ளைமேட் கூலாக மாறியது.

நாளை எப்படி? நாளை (மே 6) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கோயம்புத்தூர் மலைப் பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement