சொன்னோம், செய்துவிட்டோம் -! முதல்வர் ஸ்டாலின் பதிவு
மே 27, 2025 9:35 முற்பகல் |
அறிவார்ந்த சூழலை மாணவர்களுக்கு உருவாக்கும் முதல்வர் படைப்பகங்கள் கூடுதலாக உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பிரபல ஆங்கில நாளிதழில் வந்த செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். மேலும், அவரின் மற்றும் ஒரு பதிவில், "மார்ச் மாதம்தான் பட்ஜெட்டில் அறிவித்தோம்! சற்றும் தாமதியாமல் இந்த 2025-26-ஆம் கல்வியாண்டில் இருந்தே செயல்படும் வகையில் 11 புதிய அரசு கலை & அறிவியல் கல்லூரிகளையும் தொடங்கிவிட்டோம்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்கள்