advertisement

சீரியல் நடிகை ராஜேஸ்வரி தற்கொலை:

டிச. 13, 2025 2:45 முற்பகல் |

 

டி.வி. சீரியல் நடிகை ராஜேஸ்வரி திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 39), சீரியல் நடிகை. ‘சிறகடிக்க ஆசை', ‘பனி விழும் மலர் வனம்', ‘பாக்கியலட்சுமி' போன்ற பல பிரபல டி.வி. தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.ராஜேஸ்வரிக்கும், அவரது கணவர் சதீசுக்கும் கடந்த சில நாட்களாகவே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி சில நாட்களுக்கு முன்பாக சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கிருந்தபடியே சீரியல்களில் நடித்து வந்தார். இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமான ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு ராஜேஸ்வரி தாய் வீட்டிலேயே மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சேட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். போலீஸ் விசாரணையில் மன அழுத்தம் காரணமாக ராஜேஸ்வரி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement