advertisement

போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" - மு.க.ஸ்டாலின்

அக். 17, 2026 4:33 முற்பகல் |

 

நாகையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.270 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் போதைப்பொருள் சிக்கியது. இதுதொடர்பாக த.வெ.க. நிர்வாகி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட மெத்தபெட்டமைன் போதைப்பொருளையும் வருவாய் புல னாய்வு இயக்குனரக அதிகாரிகள், நாகை சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களிடம் விடிய விடிய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party... மத்திய அரசின் DRI அதிகாரிகளால் நாகை மாவட்டத் த.வெ.க. நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதை 'ஒழிப்பு' பற்றி முதல்-அமைச்சர் மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை 'ஒளிப்பு' எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார்.

தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் த.வெ.க.வில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள். ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party-யாக Promotion பெற்றுள்ளது.

"பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என முதலமைச்சர் இதற்கும் Punch Dialogue அடிக்காமல் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement